வியாழன், செப்டம்பர் 23, 2021

world

img

இந்தோனேசியா சிறைச்சாலை தீ விபத்தில் 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநகர் ஜெகர்தாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில், 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆயிரம் சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

;