world

img

“மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளது”

அண்மைக்காலத்தில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல போராட்டப் பேரணிகள் கவனத்தை  ஈர்த்துள்ளன. பெரும் அளவில் மக்கள் அதில் பங்கேற்றதும், ஆளும் திரிணா முல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடு மையான நிலைபாட்டை எடுத்ததும் தான் காரணமாக இருந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்தபிறகு, நிதி திரட்டலில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் பெரு மளவில் முன்வந்து பணம் தந்து கொண்டிருக்கின்றனர். கட்சி தொடங்கி யதில் இருந்தே பொது மக்கள், குடும்பங்கள், மற்றும் சிறு வர்த்தகர் கள் ஆகியோரிடம் திரட்டும் நிதியைக் கொண்டே அரசியல் பிரச்சாரங்களை யும், தேர்தல் போராட்டங்களையும் கட்சி நடத்தி வருகிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நிதி தருவதிலும் தேக்கம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு நடந்த உள்ளா ட்சித் தேர்தல் மற்றும் பாஜகவின் வளர்ச்சி ஆகியவற்றால் நிதி திரட்டுவது மிகக்குறைவாகவே நடந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியிருக் கிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் மாநி லம் முழுவதும் இருந்து ஒரு கோடி  ரூபாய் கட்சிக்கான நிதி திரட்டப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் அறிவித்தார். கடந்த பத்தா ண்டு கால அனுபவத்தோடு பார்த்தால், இது பெரும் இலக்காகவே கருதப்பட்டது.

இரண்டு மாவட்டங்கள் சாதனை

ஆனால், “மக்களிடம் சென்றபோது பெரும் ஆதரவு கிடைத்தது. யாருமே பங்களிப்பு செலுத்த முடியாது என்று சொல்லவில்லை” என்கிறார் முகமது சலீம். இரண்டு மாவட்டங்கள் மட்டும் சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி விட்டன. கிழக்கு பர்துவான் மற்றும் ஹூக்ளி ஆகிய இரண்டு மாவட்டங் களில் மட்டும் 1.30 கோடி ரூபாய்  வசூலாகியுள்ளது. வசூல் நிறைவடை யும்போது கற்பனைக்கும் எட்டாத நிதி  திரட்டப்பட்டிருக்கும் என்று கட்சி வட்டா ரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களோடு, தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், வடக்கு தினாஜ்பூர், மால்டா, நாடியா மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் சில பகுதிகள் ஆகியவற்றில் நிதி வசூல் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்டம் முர்சிதாபாத் மாவட்டத்தில் தொடங்கவுள்ளது.  நிதி தருபவர்களில் பெரும்பகுதி யினர் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப் பார்கள் என்று மாவட்டங்களில் அர சியல் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிபிஐ(எம்) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறினர். கடந்த சில ஆண்டுகளாக எங்களால் நுழைய முடியாமல் இருந்த சில பகுதிகளில், மக்கள் பெரும் அளவில் நிதி தந்துள்ளார்கள். இது  எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மக்களோடு ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்பு அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் களில் பிரதிபலிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். “கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற ஆதரவை நாங்கள் பார்க்க வில்லை. நிதி இல்லை என்று யாருமே சொல்லவில்லை. சிறிய தொகையாக இருந்தாலும், பங்களிப்பு செய்ய மக்கள் முயற்சித்தார்கள். நாங்கள் பெரும் அளவில் உற்சாகம் அடைந்துள்ளோம். மற்ற மாவட்டங்களுக்கு நிதி வசூல் செய்யச் செல்லும்போதும் இது போன்ற ஆதரவை மக்களிடமிருந்து பெறும் நம்பிக்கை உள்ளது” என்கிறார் முகமது சலீம்.

நன்றி : தி டெலிகிராப்(27.09.2022)

;