ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா நடத்தும் வான் வழித் தாக்குதல்கள் அண்மைக் காலங்களில் அதி கரித்துள்ளது. பெரும்பாலும் பொதுமக்கள் கூடுமிடங்க ளையே சவூதியின் போர் விமானங்கள் குறிவைக்கின் றன. கடந்த 24 மணி நேரங்களில் நடந்த தாக்குதல்க ளில் பள்ளிக்கூடம் ஒன்று குண்டுகளால் தகர்க்கப்பட் டுள்ளது. முதல் குண்டு பள்ளிக்கூடம் மீதும், இரண்டா வது குண்டு அதற்கு அருகில் உள்ள பெட்ரோல் விநி யோக நிலையம் மீதும் விழுந்தது. இந்தத் தாக்குதல்க ளில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
நைல் ஆற்றுப்படுகையில் உள்ள நாடுகளுட னான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள ராணுவ ரீதியான உடன்பாடுகளை எகிப்து மேற்கொள்கி றது. தனது நீர்வளம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய உடன்பாடுகள் கையெழுத்தாகின்றன. கடந்த வாரத்தில் கென்யாவுடன் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கு முன்பாக, உகாண்டா, புருண்டி மற்றும் சூடான் ஆகிய நாடுகளுட னும் உடன்பாட்டில் எகிப்து கையெழுத்திட்டது.
சட்டவிரோதமாக அமெரிக்காவால் கியூபா மீது போடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான கோரிக்கைக்கு ஆதரவு தந்த மைக்கு ஜி-77 நாடுகள் மற்றும் சீனாவுக்கு கியூபா நன்றி தெரிவித்துள்ளது. ஜி-77 நாடுகளின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய கியூபாவின் வெளியுற வுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், ஐக்கிய நாடு களின் கோட்பாடுகளை மீறும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்வதைக் கண்டிக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.