world

img

மங்காப் தீ விபத்து – குவைத் அரசாங்கம் நிவாரணம் அறிவிப்பு!

குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் நிவாரணம் அறிவித்துள்ளது.

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்தீவிபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளனர். அந்த 24 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

;