நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்றுகான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு தற்போதுதான் தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தில் தென்பட்டது போன்று அல்லாமல் மற்றொரு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்து உள்ளது.
இது உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.