world

மெக்சிகோ : மீண்டு வரும் பொருளாதாரம்

மெக்சிகோ சிட்டி, ஆக.3- நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டுத் தொடக்கம் மெக்சிகோவின் பொருளாதாரத்திற்கு நல்ல வகையில் அமைந்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகிய இரண்டும் உலக அளவில் ஏற்படுத்திய பாதிப்பு மெக்சிகோவின் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பல்வேறு நலத் திட்டங்களை ஆளும் இடதுசாரி அரசு மேற்கொ ண்டது. விலைவாசியைக் கட்டுக்குள் வைப்ப தற்கான பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் வெற்றியும் கண்டனர். இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளால் ஜூலை மாதத்தில் உற்பத்தித்துறை உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. மெக்சிகோ அரசு வைத்துள்ள அளவுகோலில் 2.9 புள்ளிகள் அதிகரித்து விரி வாக்க மண்டலத்தில் 50 புள்ளிகளைத் தாண்டி, 52.2 புள்ளிகள் வளர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட பின்னடைவைத் தாண்டி, மீட்சி அடைந்துள் ளோம் என்று புள்ளிவிவரத்துறைதெரிவித்திருக்கிறது. இருந்தாலும், சவால்கள் நம்முன் இருக்கவே செய்கின்றன. தற்போதுள்ள சர்வதேச  நிலைமை நம்மீது தொடர்ந்து சவால்களை ஏற்றி வருகின்றன. எதிர்மறை வளர்ச்சியைக் கண்டு வந்த மெக்சிகோ நடப்பாண்டில் நேர்மறை வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக மெக் சிகோ அரசுப் புள்ளிவிவரத்துறை கூறியுள்ளது.