world

img

பாலஸ்தீன அரசியலில் புதிய திருப்பம்

காசா, செப்.17- பாலஸ்தீன அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு உரு வாகியிருப்பது பாலஸ்தீன அரசியலில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் அமைப்புகள் பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. இவை  அனைத்தையும் ஒன்றிணைக்கப் பல்வேறு முயற்சிகள் பல கட்டங்களாக நடந்து வந்தன. இஸ்ரேலை எதிர்கொள்ள ஒன்றுபட்ட போராட் டமே அவசியம் என்று இந்தப் பிரிவுகள் பேசி வந்தாலும், ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.  தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு 14 அமைப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசப் போ கின்றன. அல்ஜீரியாவும், எகிப்தும் இந்தப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தன. வரும் நவம்பர் மாதத்தில் அல்ஜீரி யாவில் அரபு நாடுகளின் உச்சிமாநாடு நடக்கப் போகிறது. அதற்குள்ளாக இந்த ஒற்றுமைக் கான பணி நடக்க வேண்டும் என்று அரபு நாடு கள் முடிவு செய்திருந்தன. இந்தப் பேச்சு வார்த் தைக்கான முயற்சிகளை அல்ஜீரியாவுடன் இணைந்து எகிப்தும் ஒருங்கிணைத்து வந்தன.

ஒற்றுமைப் பேச்சுவார்த்தை அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடைபெறப் போகிறது. இதில் மேற்குக் கரைப்பகுதியில் ஆட்சியில் உள்ள ஃபடா அமைப்பின் தலைவரான முகமது அப்பாஸ், காசாத் திட்டுப் பகுதியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் பாஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கப் போகிறார்கள். இந்த நிகழ்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழு உறுப்பி னரான வாசெல் அபு யூசுப், “உள்நாட்டில் உள்ள  பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து பாலஸ்தீனர்களிடம் ஒற்றுமையைக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்” என்றார். கடந்த சில வாரங்களாகவே பாலஸ்தீன அமைப்புகளுடன் அல்ஜீரியப் பிரதிநிதிகள் பேசி வந்தனர். தனித்தனியாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தைகளில் அக்டோபர் 2 அன்று நடைபெற விருக்கும் பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஒருவேளை ஏதாவது தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அவற்றைக் களைவதற்காக அக்டோ பர் 2 அன்று, பெரிய அமைப்புகளான ஃபடா மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புக ளுக்கும் இடையில் தனியாகவும் பேச்சுவார்த்தை  நடக்கவிருக்கிறது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைக ளுக்கு எதிராக ஒன்றுபட்ட நிலைபாட்டை எடுக்க இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று பாலஸ்தீன விவகாரங்களை உற்றுநோக்கி வரும் அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இத்தகைய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி டெப்போன் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அறி வித்திருந்தார். ஹமாஸ் அமைப்புக்கு கிடைத்த  வெற்றியை ஃபடா அமைப்பு அங்கீகரிக்காததால் 2007 ஆம் ஆண்டில் இரு அமைப்புகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. அப்போதிருந்து காசாத் திட்டுப்பகுதி ஹமாஸ் நிர்வாகத்திலும், மேற்குக் கரைப்பகுதியின் நிர்வாகம் ஃபடா அமைப்பின் வசமும் இருந்து வருகிறது.

ஒற்றுமைக்கான அறிகுறிகள்

அமைப்புகளுக்கிடையிலான ஒற்றுமை பற்றி பேசப் போகிறார்கள். ஆனால், அண்மையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் இருதரப்பு மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உருவாக்கப் பட்டு விட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருது கிறார்கள். சிறைகளில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஆதரவாக இரு பக்கமும் பெருந் திரள் போராட்டங்களும், ஆதரவு உண்ணாவிரத மும் நடந்து வருவதை அவர்கள் சுட்டிக்காட்டுகி றார்கள்.
 

;