world

img

பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றப்பட்டு 3 ஆயிரம் பேர் பலியான துயரம்

லண்டன்,மே21- இங்கிலாந்து நாட்டில் 1970 - 80 ஆம் ஆண்டு களில் முறையாக சோதனை செய்யப்படாமல் நோ யாளிகளுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தால் 3 ஆயிரம் மக்கள் இறந்தனர். இது குறித்தான வழக்கில் தற் போதைய பிரதமர் ரிஷி சுனக்  மன்னிப்புக் கோரி யுள்ளார்.  மருத்துவர்கள் மற்றும் அரசாங்கத்தின் ரத்த ஊழல் 3 ஆயிரம் மனிதர்களின் மரணத் திற்கும் ஆயிரக்கணக்கானோர்  ஹெபடைடிஸ் அல்லது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டதற்கும் வழிவகுத்தது.  இந்நிலையில் அவ்வழக்கை  நடத்தி வரும்  பிரை யன் லாங்ஸ்டாஃப் கூறுகையில், 1970  மற்றும் 1980 களில் 30,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையாக சோதனை செய்யப்படாத பாதிக் கப்பட்ட இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களை இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு நோயாளிகளுக்கு ஏற்றியது. தவறு செய்தவர் களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் உண் மையை மறைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.   இது குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது “பிரிட்டிஷ் அரசுக்கு அவமான மான  நாள் என குறிப்பிட்டார்.மேலும் இந்த விசா ரணையின் முடிவு நமது நாட்டை உலுக்க வேண்டும் என்றார். இந்த சம்பவத்தில் அமைச் சர்கள், நிறுவனங்கள் மிகவும் மோசமான  முறை யில் தோல்வியடைந்துள்ளனர். இந்த கொடூரமான அநீதிக்கு நான் முழு மன துடன் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்,” என்று அவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவதாக வும் உறுதியளித்துள்ளார். இங்கிலாந்து  சிறைகளில் உள்ள அமெரிக்க கைதிகள் தானம் செய்த ரத்தத்தில் பாதிப்புகள் இருந்துள்ளது.இது கண்டறியப்பட்ட சமயத்தில் ரத்தம் ஏற்றப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டவர்க ளுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.  இந்த அசுத்தமான ரத்தம் ஏற்றப்பட்டு மரணம டைந்த மற்றும் பல நோய்களுடன் உயிர் பிழைத்த வர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வந்தன.பாதிக்கப்பட்ட மக்கள் தாங் கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக வும் இதனால் பல ஆண்டுகளாக எந்த ஆறுதலும் ஆதரவும் இன்றி  தீவிர மன உளைச்சலுக்கு ஆளான தோடு எந்த உதவியும்  நீதியும்  கிடைக்காமல் தவிப்ப தாகவும்  வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் இது விபத்து அல்ல, இது ஒரு பேரழிவு என லாங்ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சில ருக்கு சுமார்  1.05 கோடி ரூபாயை இடைக்காலத் தொ கையாக வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் 2022 ஆம் ஆண்டே ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

;