world

img

ஆஸ்கர் மேடையில் ஒலித்த பாலஸ்தீன ஆதரவுக் குரல்கள்

லாஸ்ஏஞ்சல்ஸ், மார்ச் 11 - அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை சினிமா ரசிகர்கள் உட்பட  உலகம் முழுவதும் அனைவரும் கவனித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் சிலர் தங்கள் ஆடையில் சிவப்பு நிற பேட்ஜ் அணிந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.  400 க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் கொண்ட குழு, போர் நிறுத்தத்தில் கலைஞர்களின் பங்கு (#Artists4Ceasefire) என்ற பாலஸ்தீன ஆதரவு இயக்கத்தில் இணைத்துள்ளனர்.

அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவப்பு நிற பேட்ஜ் அணிந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும்  உடனடி போர்நிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 மேலும் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு  கடிதம் எழுதியுள்ளனர்.  சிறந்த துணை நடிகருக்கான விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட பூவர் திங்ஸ் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தவரும் அவெஞ்சர்ஸ் படத்தில் ஹல்க் கதாபாத்திர  நாயகருமான மார்க்  ருஃபாலோ, பில்லி எலிஷ் மற்றும் அவா டுவெர்னே உள்ளிட்ட நடிகர்கள் இந்த ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.  மார்க்  ருஃபாலோ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியதோடு இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.