world

img

தடை செய்யப்பட்ட குண்டுகள் விநியோகம் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு கண்டனம்

ஜெனிவா, ஜூலை 12- உலகம் முழுவதும் பல நாடுகளால் கை விடப்பட்ட கொத்துக் குண்டுகளைஉக்ரைனுக்குத் தரும் அமெரிக்காவின் முடிவுக்கு மீண்டும் உலகம் முழுவதும் கண்டனம் எழுந்திருக்கிறது. மனித உயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்படுத்தும் இந்தக் கொத்துக் குண்டுகளை பெரும்பாலான உலக நாடுகள் தடை செய்துவிட்டன. இந்தக் குண்டுகள் வீசப்படும்போது ஏராளமான மனித உயிர்களைப் பலிவாங்கும் என்பதால்  நவீன படைக்கலங்களில் இந்தக் குண்டுகளுக்கு இடமில்லை என்று அந்த நாடுகள் முடிவெடுத் தன. இருப்பினும் தனது ஆயுதக்கிடங்குகளில் இந்தக் குண்டுகளை அமெரிக்கா வைத்துப் பாதுகாத்து வந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடை யில் நடைபெற்று வரும் சண்டையில் உக்ரைன்  வசம் இந்த கொத்துக் குண்டுகளை தரப்போவ தாக அமெரிக்கா அறிவித்தபோதே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் கூட்டாளிகளே, அமெரிக்காவை இந்த விஷயத்தில் பின்பற்ற முடியாது என்று அறிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே இந்தக் குண்டுகளை வழங்க  ஒப்புதல் அளித்திருப்பதால் மீண்டும் உலகம் முழு வதும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவின் ராணுவத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 80 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதத்தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்பப் போகிறார்கள். ராணுவ உதவி என்ற பெயரில் அனுப்பப்படும் இந்த ஆயுதங்களின் பட்டியலில் பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள கொத்துக் குண்டுகளும் அடங்கும். வரும் நாட்களில் பொது மக்களுக்கான சேதம் பெரும் அளவில் இருக்கும் என்ற கவலை இதனால் எழுந்துள்ளது.

நவீன ஆயுதங்களில் இந்தக் குண்டுகளுக்கு இடமில்லை என்று சொன்னாலும் தனது ஆயுதக் கிடங்குகளில் இவற்றைப் பத்திரமாக அமெரிக்கா  வைத்திருக்கிறது. உக்ரைன் பகுதிகளில் வலுவாகக் காலை ஊன்றி ரஷ்யப்படைகள் நிற்கும் இடங்களில் இந்தக் குண்டுகள் பயன் படுத்தப்படும் என்று இருதரப்பும் கூறியுள்ளன. சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசு வதில்தான் இது முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குண்டுகளைப் பற்றி நன்றாக அறிந்த வர்கள் வேறு சில ஆபத்துகளை சுட்டிக்காட்டு கிறார்கள். கொத்துக் கொத்தாக நிலப்பகுதிகளில் வந்துவிழுந்த  பிறகு அனைத்துக் குண்டுகளும் வெடித்து விடுவதில்லை. வெடிக்காத குண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.  அதன் பாதிப்புகளை நம்மால் இப்போது அளவிட முடியாது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். ஐ.நா.கவலை சிறிய குண்டுகளைப் பரந்த நிலப்பரப்பில் பரவச் செய்து இந்தக் குண்டுகள் அழிவை ஏற்படு த்தும் என்று ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் மார்ட்டா ஹர்டாடா எச்சரிக்கிறார். மேலும் கூறுகையில், “போர் நிறைவு பெற்று பல காலம் கழித்து மக்களின் உயிர்களை இந்த  வெடிக்காத குண்டுகள் பலிவாங்கும்” என்கிறார்.  பெரும்பாலும் இலக்கை விட்டுத் தள்ளியேதான் இந்தக் குண்டுகள் விழும் என்று செஞ்சிலுவை சர்வதேசக்குழு எச்சரிக்கிறது.