தென் அமெரிக்காவில் வெனிசுலா மற்றும் கயானாவிற்கு இடையே அதிகரித்து வரும் பிரச்சனையால் போர்ச் சூழல் உருவாகி வருகிறது.இந்நிலையில் பிரேசில் ஜனாதிபதி லூலா இருநாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிரச்சனை குறித்து கவலை தெரிவித்தார்.மேலும் தென்அமெ ரிக்காவில் நாங்கள் விரும்பாத ஒன்று இருக்கு மானால் அது போர் தான் என்றும் தென் அமெ ரிக்காவில் போர்ச்சூழல் உருவாகக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.