ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர் கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் ஈரானின் கட்ட ளைகளை பின்பற்றவில்லை. அவை இனப் படுகொலை நடத்தி வரும் யூத வெறி அரசின் போர் குற்றங்களுக்கு பதிலடி தருகின்றன என ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நாசர் தெரிவித்துள்ளார்.