அதிவேக உயர்வு
வியட்நாம் போருக்குப் பின்னர் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கடன் என்பதைத் தொட்ட அமெரிக்க அரசின் கடன், 1990 ஆம் ஆண்டில் 3.2 லட்சம் கோடி அமெரிக்க டாலராகவும், 2010 ஆம் ஆண்டில் 13.56 லட்சம் கோடி அமெரிக்க டால ராகவும் உயர்ந்தது. பின்பு, 2020 ஆம் ஆண்டில் 27.72 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்த அமெரிக்கக் கடன், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 30 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது.
வாஷிங்டன், அக்.14- அமெரிக்கப் பொருளாதாரம் கடனில் மூழ்கிக் கிடப்பதால் உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவு ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். கடனின் அளவு எவ்வளவு ஏறினா லும், அதற்கான வரம்பைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம் அதி கரித்து வருகிறது. தற்போது அதன் வரம்பு 31.4 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இந்த வரம்பைத் தொட்டவுடன், அதை மேலும் அதி கரிக்கவே அமெரிக்க அரசாங்கம் திட்டமிடும் என்று நிபுணர்கள் கணிக் கிறார்கள். ஆனால், இவ்வளவு கடன் குவிந்துள்ளதால் உலக வர்த்தகத்தில் சரிவு, டாலரைச் சார்ந்து இருக்கும் பொருளாதாரங்களுக்குப் பாதிப்பு மற்றும் வர்த்தக உடன்பாடுகளுக்கு பாதிப்பு ஆகிய நெருக்கடிகள் உரு வாகும் என்றும் அவர்கள் எச்சரிக் கின்றனர். 33 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நியூயார்க் நக ரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு கருவியைப் பொருத்தினார்கள். அமெரிக்கா எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறது என்பதை அது மக்களுக்கு சொல்லும். சதுக்கத்தைத் தாண்டிச் செல்பவர்கள் அமெரிக்க மக்களிடம் அந்நாட்டு அரசாங்கம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது மற்றும் எவ்வளவு திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது என்பதையும் அந்த கருவியின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும்.
கவலைப்படாத அரசு
தேசியக் கடன் கடிகாரம் என்று அழைக்கப்படும் அந்தக் கருவி மிக வும் அதிர்ச்சிகரமான புள்ளிவிப ரங்களைத் தொடர்ந்து தந்து கொண்டி ருந்தாலும், எந்த அரசாங்கமும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசும் கடனில் நாடு மூழ்கிக் கொண்டி ருப்பதைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவின் கடன் 31.1 லட்சம் கோடி டாலராக இருந்தது. அதன் பிறகும், கடனின் அளவு ஏறுமுக மாகவே இருக்கிறது. அக்டோபர் 4 ஆம் தேதியன்று அமெரிக்கக் கருவூலம் ஒரு அறிக் கையை வெளியிட்டது. அந்த அறிக் கையின்படி, அமெரிக்க மத்திய அர சின் 24.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மற்றும் அரசுத்துறைகளுக் கிடையில் 6.8 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனின் தலையிலும் 93 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யோடு ஒப்பிடுகையில், கடன் விகிதம் 126 விழுக்காட்டைத் தொட்டுள்ளது. பிரிட்டனின் பின்போல்டு என்ற வணிகச் செய்திகளை வெளியிடும் ஊடகத்தின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கக் கடன் ஒவ்வொரு நாளும் 600 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. அமெரிக்கக் கடனின் மதிப்பானது, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகமானதாகும். அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பமும் மாதா மாதம் ஆயிரம் அமெரிக்க டாலரைச் செலுத்தினாலும், கடனைத் தீர்க்க 19 ஆண்டுகள் பிடிக்கும். “இது ஒன்றும் பெருமைப் படக்கூடிய விஷயமல்ல” என்று அமெரிக்க மத்திய நிதிநிலை அறிக்கை யைக் கண்காணிக்கும் குழுவொ ன்றின் தலைவரான மாயா மக்கினி யாஸ் கூறுகிறார். இது பற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர், “கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க நாம் நிறையக் கடன் வாங்க வேண்டி யிருந்தாலும், அந்த அபாயத்தை நாம் கடந்துவிட்ட பிறகும் கடன் வாங்குவது நிற்கவில்லை. இன்னும் வாங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
பேரழிவு வரும்
அக்டோபர் முதல் வாரத்தில் புதிய உச்சத்தை அமெரிக்கக் கடன் தொட்டவுடன், இந்தக் கடனை நாம் சரியாக நிர்வகிக்காமல் விட்டால், பேரழிவு வரும் என்று பிரபல பொரு ளாதார நிருபர் ஜான் ஸ்டோஸ்செல் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டில் 50 லட்சம் கோடி அமெரிக்க டாலரைக் கடனின் மதிப்பு தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, கடனைக் கட்ட அமெரிக்கா தவறி னால், உலகப் பொருளாதார அமைப்பின் மீது குண்டு வீசியது போன்ற தாக்கம் இருக்கும்” என்று சர்வதேசப் பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் நிபுணரான ஜேக்கப் கிர்கேகார்டு ஏற்கனவே எச்ச ரித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.