world

img

சிறையில் நிறவெறி எதிர்ப்புப் போராளிகள்

வாஷிங்டன், செப். 3- நிற வெறிக் கொள்கைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடியவர்கள் அமெரிக்க சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்குக் குரல் கொடுப்ப தாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் சிறைகளில் மனித உரிமைப் போராளிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நிற வெறிக் கொள்கையை அமெரிக்க நிர்வாகம் ஆதரிக்கிறது என்ப தற்கு இந்தக் கொடூரமான சிறையடைப்பே எடுத்துக்காட்டா கும். இவர்கள் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் அடைக் கப்பட்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கைதிகள் சிறைகளில் அடைப்பதற்கே நிற வெறிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அரசியல் கைதி களாக சிறைகளில் 55 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர், அதாவது 76.36 விழுக்காட்டினர் நிற வெறிக்கு எதிராகப் போராடியவர்களாவர். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை சகித்துக் கொள்ளாத அமெரிக்க நிர்வாகம், அவர்களை சிறை களில் அடைத்துள்ளது. மேலும், சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசியல் கைதிகளையும் பொதுவான குற்றவாளிகள் என்றே அமெரிக்கா ஆவணப்படுத்துகிறது. இவர்களின் கொள்கைக் கான போராட்டம் என்று பார்க்காமல் தனித்தனியாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாக இவர்களது வழக்குகள் எடுக்கப் படுகின்றன. உலகம் முழுவதும் கண்டனத்துக்கு உள்ளாகும் நிற வெறிக்கு எதிராகப் போராடும் போராளிகள் அமெரிக்கச் சிறைக ளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மனித உரிமைக ளுக்கு எதிரானது என்று இவர்களின் விடுதலைக்காகப் போரா டும் பல சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

ஒற்றுமைக்கு எதிர்ப்பு

அமெரிக்க அரசால் குறிவைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாடுக ளுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுவதை ஏகாதிபத்தியம் விரும்புவதில்லை. அப்படிக் குரல் எழுப்பிய 11 பேர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசு குறிவைப்பதே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் தன்னிடம் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்ப தற்காகவே ஆகும். அதற்கு உள்நாட்டில் எதிர்ப்பு எழுவதை அமெரிக்க நிர்வாகம் விரும்புவதில்லை. இத்தனைக்கும் கியூபாவின் நிலப்பகுதியில் உள்ளதும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியுமான குவாண்ட னாமோவில் உள்ள சிறையில் உள்ளவர்களை அரசியல் கைதிகள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த  சிறையை இழுத்து மூட வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், தங்களின் வலுவான அரசியல் எதிரிகளை அடைத்து சித்ரவதை செய்ய குவாண்ட னாமோ சிறையைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வ தகவல்படி இங்கு 36 அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். மேலும், குடியுரிமை பெற குறுக்கு வழிகளில் வந்தார்கள்  என்று கூறி ஆயிரக்கணக்கானோர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மீது நடைபெறும் மனித உரிமை மீறல் கள் குறித்த குரல்கள் மக்கள் எட்டாமல் பார்த்துக் கொள்கி றார்கள். மொத்தத்தில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல் கள் பெரிய அளவில் இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.