what-they-told

img

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுதில்லி,ஆக.23-  சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு எதிராக, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து ள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கைது நடவடிக்கைக்கு முன்னர், முன்ஜாமீன் கேட்டு அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட நீதி பதிகள், வெள்ளியன்று விசார ணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தனர். ஆனால் புதன்கிழமையன்று  சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், கைது  நடவடிக்கை யை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  மீதான விசாரணையை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

ஆனால் சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் திங்கட்கிழமை வரை தடை விதித்துள்ளனர். முன்னதாக, அரசு தரப்பு வழக்க றிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தா மற்றும் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி இடையே காரசார வாதம் நடைபெற்றது. சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கக் கூடாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு வழக்குகளின் விசாரணையும், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடி வடையும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

;