weather

img

4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்....

சென்னை:
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல்3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகஅனைத்து மாவட்டங்களி லும் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் செல்ல முடியாத வகையில் கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிக்கை யில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்குவெப்பநிலை உயரும். திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரிசெல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குமரி கடல்பகுதியில் நிலவும்வளிமண்டல சுழற்சி மற்றும்உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

;