weather

img

நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
தமிழகத்தில் புதன்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 15 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை,  திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பதிவு
குழித்துறை, உசிலம்பட்டியில் தலா 4 செ.மீ, ஜெயங்கொண்டம், திருபுவனத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.

;