weather

img

மீத்தேனைப் புறக்கணிக்காதீர்கள்

-தம்பரம் இரவிச்சந்திரன்

பசுமைக்குடில் வாயுக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்லது என்றாலும் மீத்தேன் ஏற்படுத்தும் கெடுதிகள் பல சமயங்களில் திரை விலக்கி வெளியே வருவதில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரும் இருபது ஆண்டுகளில் புவி வெப்ப உயர்வில் மீத்தேனிற்கு உள்ல பங்கு கார்பன் டை ஆக்சைடைக் காட்டிலும் 80% அதிகமாக இருக்கும் என்ற யதார்த்தம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

ஆயுள் குறைவு ஆபத்து அதிகம்
இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஆய்வு அமைப்பின் (Institute of Sustainablity Studies IASS) விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மீத்தேனின் தீய விளைவுகள் குறித்து முன்கூட்டியே உணர்ந்து செயல்படவேண்டும் என்று இவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைக் கூறுகிறது. இந்த வாயுவின் ஆயுள் குறைவு என்றாலும் இதனால் ஏற்படும் அழிவுகள் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கக்கூடியவை.

கார்பன் டை ஆக்சைடுக்குச் சமம்
மீத்தேன் உட்பட பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு கார்பன் டை ஆக்சைடுக்குச் சமம் (equalent) என்னும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. புவி வெப்ப உயர்வில் நூறாண்டு கால பாதிப்பை மீத்தேன் ஏற்படுத்தக்கூடியது. இதன் அடிப்படையில் கார்பன் டை ஆக்சைடிற்கு சமமான அளவு என்ற முறையில் மீத்தேன் உமிழ்வு கணக்கிடப்படுகிறது.

அளவிடும் முறையில்
ஆனால் இந்த முறை உண்மையில் காலநிலை மாற்றத்தில் மீத்தேனின் தாக்கம் எப்படிப்பட்டது, அது மனிதனின் உடல் நலத்தையும், சூழல் மண்டலங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி தீவிரமாக ஆராயப்படுவதில்லை. புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு, நெற்பயிர் போன்றவை மீத்தேன் உமிழ்விற்கான முக்கிய மூலங்கள்.

எதிர்பார்ப்பதை விட
வரும் ஆண்டுகளில் வாயு மண்டலத்தில் மீத்தேனின் உமிழ்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவின் மூலம் வெளித்தள்ளப்படும் மீத்தேன் வாயுவுன் அளவு பல சமயங்களிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதும் மீத்தேன் உமிழ்வு பற்றி உலகம் அதிகம் கவலைப்படாமல் இருக்கக் காரணம் என்று இந்த  ஆய்வுகள் கூறுகின்றன.

வயல்கள் உமிழும் மீத்தேன்
நீர் நிறைந்த நெல் வயல்களில் ஆக்சிஜன் மண்ணிற்கு அடியில் ஊர்ந்து இறங்குவது தடைபடுவது மீத்தேனை உமிழும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு சாதகமாகிறது. ஆட்சியாளர்கள் காலநிலை மாற்றம் குரித்த விஷயத்தில் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே மீத்தேன் உமிழ்வு குறைக்கப்படுவதில் அக்கறை காட்டப்படவேண்டும்.

எண்ணெய்க் கசிவும், வாயுக் கசிவும்
எண்ணெய் மற்றும் வாயுக்கிணறுகளில் இருந்து உருவாகும் கசிவுகளைக் கண்டறிவதில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவேண்டும். இது தவிர மீத்தேனைக் கைப்பற்றுதல், நிலத்திற்கடியில் இறக்குதல் போன்ற செலவு குறைந்த நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீத்தேன் உமிழ்வின் அளவை குறைக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

;