புதுதில்லி:
தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஒரு சில இடங்களில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.இந்திய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:முதல் வாரத்தில் மழை: (2020 டிசம்பர் 24 முதல் டிசம்பர் 30 வரை) தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை இயல்புக்குக் குறைவாக இருக்கும்.இரண்டாவது வாரத்தில் மழை: (2020 டிசம்பர் 31 முதல் 2021 ஜனவரி 6 வரை) கிழக்கு - மேற்கு திசை காற்று காரணமாக மத்திய இந்திய மற்றும் வடக்கு சமவெளிப் பகுதியில் வார இறுதியில் லேசான தூரல் நிலவும். தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் மழைப் பொழிவு இயல்புக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் மழை/பனிப்பொழிவு இயல்புக்குக் குறைவாக இருக்கும்.