technology

img

லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் 

லாவா நிறுவனம் தன்னுடைய முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ‘அக்னி 5ஜி’-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’5ஜி ’ தொழில்நுட்ப வரிசையில் இணைந்திருக்கும் லாவா நிறுவனம் சில முக்கிய அம்சங்களுடன் ‘அக்னி 5ஜி’ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் பிராசசர் உடன் வெளியாகியிருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை, 8 ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 64எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 5 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது. 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஎஸ் டைப்-சி போர்ட்  போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இதன் ஆரம்ப விற்பனை விலையாக ரூ.19,999 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.