tamilnadu

இளம்பெண் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஆக. 1- செந்தாரகையின் மரணத்திற்கு காரண மான குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செங்கை-காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் வி.தமிழரசி, மாவட்டச் செயலாளர் ஆர். சௌந்தரி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜெயந்தி யின் மூத்த மகள் செந்தாரகைக்கு கடந்த மே  மாதம் 24ம் தேதி எளிய முறையில் திருமணம்  நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு முன்பு செந்தாரகை வேறு ஒருவரை காத லித்ததாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பம் இன்றி திருமணத்திற்கு சம்ம தித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மாதர் சங்க மாநிலச் செய லாளர் வ.பிரமிளாவை ஜூன் 16 அன்று செந்தாரகை நேரில் சந்தித்து, பிடிக்காத வாழ்வு வாழ தன்னை பெற்றோர் வற்புறுத்து வதாகவும், தன்னிடம் கடுமையாக நடந்து  கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனடிப் படையில் செந்தாரகையின் பெற்றோரை அழைத்து குழப்பமான மனநிலையில் செந்தாரகை  இருப்பதால், அவருடைய மன நிலை மாற சிறிது கால அவகாசம் தேவை,  அதுவரையில் கணவருடன் சேர்ந்து வாழ  கட்டாயப்படுத்த வேண்டாம்  என்று  அறி வுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட செந்தாரகையின் பெற்றோர் உறுதி அளித்த னர். செந்தாரகையின் விருப்பத்தின் பேரில்  அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப் பட்டார். வீட்டிற்கு சென்ற மறுநாள் செந்தாரகை, தான் ஆபத்தில் இருப்பதாக மாநிலச் செயலா ளர் வ.பிரமிளாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவ ரது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி  அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், செந்தார கையை கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்ல வும் அறிவுறுத்தப்பட்டது.

அதற்கு பின் அன்று மாலையே தாம் நலமுடன் இருப்பதாக செந்தாரகை மீண்டும் பிரமிளாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஜூலை 8ம் தேதி செந்தாரகை தற்கொலை செய்து கொண்டார் எனும்  அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அந்த துக்க செய்தி  மறைவதற்குள் ஜூலை 24ம் தேதி செந்தாரகை யின் தந்தை பாலாஜியை காவல்துறை கைது  செய்ததாகவும் செய்தி வெளியானது. புரையோடிப் போன சடங்கு, சம்பிரதா யங்கள் மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வு களை எதிர்க்கிற, காதல் திருமணம், சுய விருப்பத் திருமணங்களை ஆதரிக்கிற, தனக்கான முடிவைத் தானே எடுக்கக் கூடிய  வயதை அடைந்த ஒரு பெண்ணின் விருப் பத்திற்கு என்றும் ஆதரவு தருகின்ற அமைப்பு மாதர் சங்கம். கௌரவம் காரணமான குற்றங்களையும், வன்முறைகளையும் ஒரு  நாளும் மாதர் சங்கம் ஏற்காது. இத்தகைய  வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறது.  செந்தாரகைக்கு உரிய நீதி கிடைத்திடும் வகை யில் காவல்துறை அதற்கான நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும். குற்றவாளி யாராக  இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;