tamilnadu

img

விளையாட்டுப் பூங்கா: குப்பைக்கிடங்காக மாற்றம் பொதுமக்கள் 5 வது நாளாக தொடர் போராட்டம்

கூடுவாஞ்சேரி, ஜன.29-  செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிக் குட்பட்ட 18 ஆவது வார்டு வள்ளலார் நகர், டி.டி.சி.பி அனுமதி பெற்ற குடியிருப்பு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா விற்கான இடம் ஒதுக்கப்ப ட்டது. இந்த பூங்காவை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் 8 ஆண்டுகளுக்கு முன்பே  பூங்காவை குப்பைக் கிடங்காகவும், திடக்கழிவு மேலாண்மைக்காகப் பயன்படுத்த தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரி வித்தனர். ஆனால் மக்கள் எதிர்ப்பையும் மீறி பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகளைக் கொட்டத் துவங்கியது. தற்போது, குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் சேகரிக்க ப்படும் குப்பைகளைப் பூங்காவில் கொட்டிவரு கின்றனர். இதனால் இப்பகுதி யில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதுடன். அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகத் தெரிகின்றது. இந்நிலையில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் 5 நாட்களாக  தொடர் போரா ட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற னர். இந்நிலையில் புதனன்று (ஜன. 29) அப்பகுதி மக்கள் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘பூங்காவாக இருந்த இடத்தில் குப்பை கொட்டு வதை எதிர்த்து எட்டு வருடங்களாகப் போராடி வருகின்றோம். தற்போது வரை பேருராட்சி வரை படத்தில் விளையாட்டுத் திடலாகவே இருக்கிறது.  எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்தை விளையாட் டுத் திடலாகவும், பூங்காவாக வும் மாற்றித் தர நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்கின்றனர்.

;