tamilnadu

img

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியன் குறைவாக உள்ளதால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு, ஆக.5- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு  விபத்து, அவசரப்பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட பலவேறு பிரிவுகள் உள்ளன. விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், எக்ஸ்ரே உதவியுடன் உடலில் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் அறிந்து கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 எக்ஸ்ரே பிரிவு இயங்கி வருகிறது. இதில் இரவில் ஒரு எக்ஸ்ரே பிரிவு மட்டுமே செயல்படுகிறது. இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கிறார். மேலும் வார்டுகளில் எக்ஸ்ரே எடுக்க, இரவில் பணிபுரியும் ஒரு பணியாளரே சென்று எடுப்பதால் அவர் திரும்பி வரும் வரை, புதிதாக வரு பவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஞாயி றன்று (ஆக.4) இரவு 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க வந்துள்ள னர். வார்டு பணிக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் சென்றதால், இவர்கள் பல மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படு கிறது. இது குறித்து மருத்துவ மனை பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘இரவில் ஒரு எக்ஸ்ரே டெக்னீஷியன் மட்டுமே பணியில் இருப்பார்.  இவர் வார்டு பணிக்கு சென்று விட்டால், அறை பூட்டியிருக்கும். மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி ரேடியாலஜி துறை யில் படிக்கும் மாணவர்களை எக்ஸ்ரே பிரிவில் பயன்படு த்த வேண்டும். ஆனால் நிர்வாகம் இவர்களை பயன்படுத்துவதில்லை. அவர்களை பயன்படு த்தினால் இப்படியான பிரச்சனைகள் ஏற்படாது’ என்றார்.

;