tamilnadu

img

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவன்.... ஐஎஸ்ஐ சித்தாந்தத்தை பரப்பினானாம்

ஸ்ரீநகர்:
ஐஎஸ்ஐ (பாகிஸ்தான் உளவு அமைப்பு) சித்தாந்தத்தை பரப்பியதாக காஷ்மீரில் 10-ஆம் வகுப்பு சிறுவனைப் போலீசார் கைது செய் துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சிறுவன், முகநூல் கணக்கின் மூலம் ‘இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வந்ததாகவும், அந்த முகநூல் கணக்கை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததன் அடிப்படையிலேயே சிறுவனைக் கைது செய்ததாகவும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.“அந்தச் சிறுவன் பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்; ஆகவே அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது” என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி கலீல் போஸ்வால் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஆதரவு முழக்கங் களை எழுப்பியதாக, ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த பாசித் ஆஷிக் சோபி(19), தலிப் மஜித் (19) மற்றும் அமீர் முகைதீன் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;