tamilnadu

img

வி.பி.சி நினைவு சுடருக்கு வேலூரில் உற்சாக வரவேற்பு

வேலூர்,ஜன.20- சிஐடியு தமிழக ஸ்தாபக தலை வர்களில் ஒருவரான மறைந்த தோழர்  வி.பி.சிந்தன் நினைவு சுடர்  வட சென்னை மாவட்டச் செயலாளர் திரு வேட்டை தலைமையில் துவங்கி திரு வள்ளூர் மாவட்டத்தை கடந்து வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை வந்தடைந்தது. அங்கு  சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சி. துரைராஜ் தலைமையில் நடந்த  வரவேற்பு நிகழ்ச்சியில் ஞானமுரு கன், ஏபிஎம் சீனிவாசன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். நெமிலி, பனப்பாக்கம் பகுதி களில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் வெங்கடேசன் தலைமையில் வரவேற்பளித்தனர். வாலாஜா பேருந்து நிலையத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.பாபு தலைமை யிலும்,  ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில்  மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன் தலைமையிலான வாலாஜா என்.ரமேஷ், ரமேஷ், குணசேகரன், முரு கன், மனோகரன், மகேந்திரன் ஆற்  காடு பேருந்து நிலையத்தில்  பொதுத்  தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி டி.சந்திரன் தலைமையிலும், வேலூ ரில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்பி.  ராமச்சந்திரன் தலைமையில் ஆர்டிஓ  சாலையில் வரவேற்பு அளித்தனர். பயணக் குழுவில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன், மாநிலக் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் பயணக் குழுவில் பங்கேற்றிருந்தனர். முன்னதாக  வேலூர் மாவட்டத் தின் 7 இடங்களிலிருந்தும், திருப் பத்தூர் ராணிப்பேட்டை தலா ஒன்று என வி.நாகேந்திரன் தலைமையில் கருகம்பத்தூரில் இருந்து வே.கண்  ணன் நினைவு சுடர், ஏ.பழனி யப்பன் தலைமையில் காட்பாடி யிலிருந்து கே.ஆர்.சுந்தரம் நினைவு  சுடர்,மறைந்த மின் ஊழியர் மத்திய அமைப்பு தோழர்கள் வி.இ. ஏகநாதஈஸ்வரன்,  டி.ஜெகன்நாதன் நினைவு சுடர் முறையே வேலூரி லிருந்து எம்.கோவிந்தராஜ் மற்றும் திருப்பத்தூரிலிருந்து எஸ்.சுடர் தலைமையிலும், வேலூர் கிருஷ்ணா நகர் போக்கு வரத்துக் கழக பணிமனையில் இருந்து தோழர்  ஏபி.கோபாலன் நினைவாக கே.ரவிச்சந்திரன் தலை மையில் நினைவு சுடர், வேலூர் பழைய பேருந்து நிலையம் சிம்லா  ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து டி.முரளி தலைமையில்  கே. ஜோன்ஸ் பிரபாகரன் நினைவு  சுடர், குடியாத்தம் நகரத்திலிருந்து தோழர்கள்  வி.கே.கோதண்டராமன், எச்.எம்.அதாவுல்லா நினைவு சுடர், ராணிப்பேட்டையில் துப்பு ரவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஜி.கோதண்டபாணி தலைமையில் ஆர்.ஏ.கண்ணன் நினைவு சுடர் ஆகிய துணை சுடர் பய ணங்களும் அகில இந்திய மாநாட்டு  சுடர் பயணக்குழுவிடம் சேர்க்கப் பட்டது.

;