tamilnadu

வேலூர், சிவகாசி முக்கிய் செய்திகள்

காலம் தவறாமையை மாணவர்களுக்கு கற்றுத்தருவது அவசியம்
வேலூர், செப். 8- காலம் தவறாமையின் உன்னதத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், ஆசிரியர் தினத்தை நாள்தோறும் கொண்டாட வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் வேலூரில் படித்தவர் என்பதில் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காலம் தவறாமையை கற்றுத்தர வேண்டும். இந்தியாவிலேயே அதிகளவில் ஆசிரியர்கள் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது தமிழகத்தில்தான் என்றார்.  மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பேசுகையில், இயற்கையைப் பாதுகாப்பது, ஏரி, குளங்களைப் பராமரிப்பது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணி என்பது ஒர் உன்னதமானப் பணி. தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ பெரியார், காமராஜரின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இயற்கையுடன் ஒன்றி வாழ்வதற்கு கற்றுத்தர வேண்டும் என்றார். விழாவில் 963 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, விஐடி ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் நன்றி கூறினார்.

பட்டாசு ஆலையில் தீ விபத்து 
சிவகாசி, செப்.8- சிவகாசி சொக்கலிங்க புரத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் அதிகாரி கள் ஆய்வு செய்தபோது தீ விபத்து ஏற்பட்டது.  சிவகாசி வி.சொக்கலிங்க புரம் கிராமத்தில் விஜய் ஆனந்த்என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிக்கைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரி கள் பட்டாசுஆலைகளில் விதி மீறல் உள்ளதா என திடீர் ஆய்வு செய்வது வழக்கம். சனிக்கிழமை பட்டாசு ஆலையில் வரு வாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதி காரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.  அப்போது ஆலையில் இருந்த மூலப்பொருட்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவற்றை அப்புறப்படுத்தும் போது, எதிர்பாரதவிதமாக, ஏற்பட்ட உராய்வில் லேசான தீ விபத்து ஏற்பட்டது.