tamilnadu

img

சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி நாராயணபுரத்தில் நிரந்தர சுடுகாடு ஒதுக்கீடு

வேலூர், செப். 5- வாணியம்பாடி தாலுகா நாராயண புரம் கிராம தலித் மக்கள் நிரந்தர சுடு காடு இன்றிஅவதிப்பட்டு வந்தனர். கடந்த மாதம், இறந்தவரை புதைக்க  சுடுகாடு இல்லாததால், பாலத்தி லிருந்து கயிறு கட்டி கீழே இறக்கி பாலாற்றின் நடுவே புதைத்தனர். இது சம்பந்தமாக தானாக முன் வந்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமாக, வாணியம்பாடி தாசில்தார் பதில் மனு அளித்தார். அதில், தலித் மக்க ளுக்கு தனி சுடுகாட்டிற்காக சுமார் 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ள தாக கூறியிருந்தனர். இந்த பதிலை  ஏற்க மறுத்த நீதிமன்றம் தலித் மக்க ளுக்கு தனி சுடுகாடு என்ற அறி விப்பு ஏற்க முடியாது. ஆதிதிராவிடர் என்ற பெயரில் தனி பள்ளி இருக்கக் கூடாது. மேலும் தலித்துகளுக்கு தனி காவல் நிலையமோ, தனி அரசு அலுவலகமோ இல்லாத போது எப்படி அரசே தனி சுடுகாடு ஒதுக்கலாம்,” என நீதிமன்றம் கேள்வி கேட்டு, அதற்கான பதில் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்த ராஜாவின் தாய் கனகம்மாள் (75)புதன்கிழமை செப். 4  ஆம் தேதி இறந்துவிட்டார். அவரை புதைக்க இடு காடு இல்லாததால்,   அவரின் உடலை சாலையில் வைத்து மறியல்  போராட்டம் நடத்தப் போவதாக அறி விக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த் துறை அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடங்களை ஆய்வு செய்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டச் செயலாளர் இந்துமதி, ஆம்பூர் செயலாளர் வ.அருள் சீனி வாசன், ராமச்சந்திரன், உள்ளிட்டோர் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் தனி  வட்டாட்சியர் குமரவேலிடம் அளித்த  மனுவில்,“தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாடு இடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளனர். எனவே அந்த இடத்தை அவர்களுக்கு ஒதுக்கித்தர வேண்டும்” என்று வலியுறுத்தினர். நீண்ட நேரம் ஆய்வு செய்த அதி காரிகள்  அந்த 75 சென்ட் நிலத்தை  ஜேசிபி எந்திரம் மூலம் சமன்படுத்தி  கொடுத்தனர். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கடந்த 20 ஆண்டு கால போராட்டத் திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இத னையடுத்து, கனகம்மாள் உடலை புதைத்தனர்.