வேலூர், அக்.20- அத்துமீறி ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தகுதியானவர்க ளுக்கு மட்டும் பட்டா வழங்கக் கோரியும் அரசுப் பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு ட்பட்ட ஏழருவி கிராமம். இங்குள்ள பனங்கொட்டை ஏரிக்கரை அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஏராளமானவர்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். பட்டா வழங்கும் பணிகளில் வரு வாய்த்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஏழரு விக்கு அருகில் உள்ள பகுதி யைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்த புறம்போக்கு இடத்தில் திடீரெனக் குடிசை கள் அமைத்து தங்களு க்கும் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். 15 நாள்களுக்கு முன்பு புதிதாக குடிசை அமைத்து பட்டா கேட்பதா என கிராம மக்கள் ஆட்சேபம் தெரி வித்துள்ளனர். இது தொட ர்பாக பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க க்கோரி பொம்மிக்குப்பத்தி லிருந்து திருப்பத்தூர் சென்ற அரசுப் பேருந்தை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுப்பதாக வரு வாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.