tamilnadu

img

தென்னிந்திய பல்கலை.இடையே கால்பந்து போட்டி

வேலூர்:
விஐடியில் துவங்கிய பல்கலைக்கழகங்களுக்கு இடையே  தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியை வேலூர் மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.இந்த கால்பந்து போட்டியில் தமிழகத்தில் இருந்து 37, கர்நாடகத்திலிருந்து 33, ஆந்திர பிரதேசத்திலிருந்து 17, கேரளாவிலிருந்து 11, தெலுங்கானாவிலிருந்து 9 மற்றும் புதுவையில் இருந்து 1 அணி என மொத்தம் 108 அணிகள் பங்கு பெறுகின்றன. வரும் 18 ஆம் தேதி போட்டிகள் நிறைவடைகிறது. இந்த போட்டி மின்னொலியிலும் நடைபெறும். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி , பஞ்சாப்பில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெறும்.

போட்டியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர்,“கால்பந்து போட்டிக்கு பெயர் போன ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா போன்று நம் நாடும் கால்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும். இந்நாடுகளில் போட்டியில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை அந்நாடே கொண்டாடும். இந்தியா கிரிக்கெட்டுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறது, அதே போல் மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்கள் தொகையில் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம்,அதே மாதிரி அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நம் நாடு பங்கு பெற்று சாதனை புரிய வேண்டும்” என்றார்.விஐடி உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் தலைமை தாங்கினார். விளையாட்டு துறை இயக்குநர் முனைவர். தியாக சந்தன் வரவேற்றார். இணை துணை வேந்தர் முனைவர். எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்திய நாராயணன் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு துறை மாணவர் செயலர் அஸ்வின் சுரேஷ் நன்றி கூறினார்.

;