tamilnadu

img

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாடு எதிர்ப்பு

வேலூர், செப்.16- அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டத்தின் 32-வது மாநாடு வாணியம்பாடியில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் எஸ்.பழனி ராஜ் தலைமையில் துவங்கிய மாநாட்டை தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார் துவக்கி வைத்தார். எல்ஐசி-யின்வேலூர் முதுநிலை கோட்ட மேலாளர் என்.ராம கிருஷ்ணன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க வேலூர் கோட்ட பொதுச் செயலாளர்  சிவராமன், எல்ஐசி முகவர் சங்க கோட்டச் செயலாளர் தா.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சிவாஜி  வரவேற்றார். எல்.ஐ.சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது. ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி வரி நீக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெற வேண்டும். தேசிய வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் தலைவ ராக எஸ்.பழனிராஜ், பொதுச் செய லாளராக எஸ்.ராமன், பொருளாள ராக எல்.குமார் ஆகியோர் நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர்.

;