tamilnadu

img

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை திறக்க உத்தரவு

சென்னை, ஆக.27- பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு, வைகை அணைகளிலிருந்து 29 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்  தாக்கு இருபோக பாசனப் பகுதியில் முதல்  போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு  விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தது. அதை ஏற்று வைகை அணையி லிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு முழுமை யாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். மேலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து மொத்தமாக 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கன அடி தண்ணீ ரினை வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும்.

இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர்  பாசன நிலங்கள் பயன்பெறும். அதே போல் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போக  சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர்  தேவைக்காகவும் பெரியாறு அணையி லிருந்து தண்ணீர் திறக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 29 ஆம்  தேதி முதல் 120 நாட்களுக்கு, விநாடிக்கு 300  கன அடி வீதம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஆணை யிட்டுள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடி நாயக்கனூர் வட்டங்களில் 14 ஆயிரத்து 707  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக்  கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற் காக ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் 137 நாட்  களுக்கு தண்ணீர் திறந்து விடவும் முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்  டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும் என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;