வேலூர், நவ. 26- வீடு இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வுடன் கூடிய வீட்டுமனை வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு, கோயில் நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் . தமிழக அரசின் அரசாணை எண் 318 அமல்படுத்தி பட்டா வழங்கி இடங்களை பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வேலூர் மற்றும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூரில் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா குழுக்களின் சார்பில் நாகேந்திரன், சி.எஸ். மகாலிங்கம் ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதன் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஜி.நரசிம்மன், எஸ்.செல்வி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடை பெற்ற இடத்திற்கு வந்த வேலூர் வட்டாட்சி யர் சரவணமுத்து மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகர மற்றும் தாலுகா செயலாளர்கள் பி.காத்தவராயன், கே.சாமிநாதன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி துவக்கி வைத்தார். சு.சம்பத்குமார், பாபு, கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.