tamilnadu

img

மழைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக 5 சிற்றுந்துகள்

வேலூர், ஆக. 17- வேலூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்க ளின் பயன்பாட்டுக்காக 5 சிற்றுந்துகள் இயக்கி  வைக்கப்பட்டன. இதன் தொடக்க விழாவிற்கு ஆட்சியர் அ.  சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில  வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் அகியோர் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 சிற்றுந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் வட்டம் புதூர் நாடு,  கோம்பை, கம்புக்குடி மலைக் கிராமங்க ளுக்கும், பேர்ணாம்பட்டு வட்டம் அரவட்லா கிராமத்துக்கு என 5 சிற்றுந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், அரசுப் போக்குவரத்து கழக வேலூர் மண்டலப் பொது மேலாளர் வெங்க டேசன், துணைப் பொது மேலாளர் பொன் பாண்டி, தொழில்நுட்ப மேலாளர் நடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.