tamilnadu

img

கொரோனா வைரசை அழிக்க கருவியை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன்
அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய புதிய கருவி, வெண்டிலேட்டரைக் (VITAL Ventilator) கண்டுபிடித்துள்ளது நாசா. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் வடிவமைத்த சில கருவிகளை பார்வையிட்டார்.

கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளை வெளிப்படுத்தும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள விட்டல் வென்டிலேட்டர் என்ற கருவியை டிரம்பிற்கு காட்டியுள்ளனர். அதில் "ஒரு வென்டிலேட்டர் போல் செயல்படும் சாதனம், ஒரு தூய்மைப்படுத்தும் அலகு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் கிட் ஆகியவை  உள்ளது.

மேலும் ஒரு அறையின் மேற்பரப்புகளில் உள்ள அனைத்து வைரஸ்களையும் கொல்லும் (AMBUSTAT) அம்புஸாட் உள்ளது.  கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள கிருமிகளை அழித்து விடும்.செயல்முறை முடிந்ததும், அந்தப் பகுதி சுத்தமாகிவிடும். துடைக்கத் தேவையில்லை. இந்தக் கருவி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
 

;