tamilnadu

img

தந்திச் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

நாமக்கல், செப்.18- விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் உயர் மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் தந்திச் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புத னன்று நடைபெற்றது. 1885 ஆம் ஆண்டு தந்திச் சட்ட மானது, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் விவ சாயிகளுக்கு நிலத்தின் மீதான உரி மைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அரசுக்குத் தேவை என்றால் நிலத்தையும் கையகப்படுத்துதல் அல்லது பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்துள்ளது. தந்தி என்ற தொழில் நுட்ப வடிவமே இப்போது நாட்டில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் காலாவதியாகிப் போன இச்சட்டம் மட்டும் இன்னும் உயி ரோடு இருக்கிறது. விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள ஆங்கி லேயர்கள் போட்ட சட்டம் விடுதலை பெற்று 73 ஆண்டுகள் ஆகியும் கூட இந்தியாவில் பயன்படுத்தப்படு கிறது.  இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான், தமிழகத்தின் மேற்கு மாவட் டங்களில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின் திட் டங்களை செயல்படுத்த திட்டமிட் டுள்ளனர். இத்திட்டத்தை மாற்று வழி யாக, சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக விவ சாயிகள் போராடி வருகின்றனர். தமி ழக அரசு போராடும் விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளைப் புனைந் துள்ளது. மேலும் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரு கின்றது.

இந்நிலையில் விவசாயிகள், நில உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்; ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற் கும் கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும் உரிய இழப்பீ டும் வழங்க வேண்டும்; புதிதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்திட வேண்டும்; விவசாயிகள் மீது புனை யப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; விவசாயி களின் நில உரிமையையும் வாழ்வா தாரத்தையும் பாதிக்கும் 1885 தந்திச் சட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தந்தி சட்டச் நகலெரிப்பு போராட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணா மலை, கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட் சியர் அலுவலகங்கள் முன்பு புத னன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சட்ட நகலெரிப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். பொதுச்செய லாளர் பெ.சண்முகம், கரும்பு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலை வர் எஸ்.நல்லாகவுண்டர், மலை வாழ் மக்கள் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மு.து.செல்வராஜ், ஆர்.வேலாயுதம், மணப்பள்ளி பெருமாள், சதாசிவம், எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, நாமக்கல் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கி பேரணி யாக விவசாயிகள் சென்றனர். பின் னர் இந்திய தந்திச் சட்ட நகலை தீ வைத்து எரித்த போது காவல்துறை யினர் தடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதனை மீறி நகல் எரிக்கப்பட்டது. பின்னர் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்ட பத்தில் அடைத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற போராட்டத் துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் ஆர். குமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டம், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங் கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித் தார்.
 

;