tamilnadu

img

உலக வெண்புள்ளிகள் தினத்தையொட்டி முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக வெண்புள்ளிகள் தினத்தையொட்டி புதனன்று (ஜூன் 17) தாம்பரத்தில் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையாளர் சகாதேவன் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசத்தை வழங்கினார்.  புனித பாத்திமா திருக்கோயில் அருட்தந்தை ஜான் குரியன், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா அமைப்பின் செயலாளர் கே.உமாபதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;