பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்றும் புதிதாக அமையும் நலவாரியத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
**************
15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கான நிதியாக ரூ.335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**************
தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான சுற்றுச்சூழல் மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
**************
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.