tamilnadu

img

நலவாரியங்கள் முடக்கம்:  பொன்.குமார் குற்றச்சாட்டு

 விழுப்புரம்.அக்.15- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜன நாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் விக்கிரவாண்டி பகுதி வாக்காளர்களிடம் வாக்கு  கேட்டு பிரச்சாரம் மேற்கெண்ட தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது,“ திமுக ஆட்சியில் தான் கட்டுமானம் உள்ளிட்ட  17 வகையான தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து,  திருமணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அந்த நலவாரியங்கள் எல்லாம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது” என்றார். 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பின்ன டைவு ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் கட்டுமான தொழில்  வீச்சியே என பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறப்  போகும் கொல்கத்தாவை சேர்ந்த பானர்ஜி சொல்லுகிறார். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் முடங்கியதாலும் கட்டுமான தொழிலாளர்கள், ஒரு கோடி அமைப்பு சாரா  தொழிலாளர்கள் வேலையற்று வாழ்வாதாரம் பாதிக்க பட்டுள்ளனர். இந்த மக்கள் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.