tamilnadu

விருதுநகர்,தேனி, திண்டுக்கல் , மதுரை முக்கிய செய்திகள்

ஆட்டோ சங்க தகவல் பலகை திறப்பு விழா 
திருவில்லிபுத்தூர், ஜூன் 27- திருவில்லிபுத்தூர் ஒன்றியம் வைத்தி லிங்கபுரம் கிராமத்தில் சிஐடியு சார்பில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் தொடங் கப்பட்டது. இதையொட்டி சங்கத்தின் தக வல் பலகையை சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.என்.தேவா திறந்துவைத்தார். நிகழ்விற்கு ஆட்டோ சங்க தலைவர் முரு கன் தலைமை வகித்தார். சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் திருமலை மாவட்டக் குழு உறுப்பினர் சந்தனம், படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சித் தலைவர் முருகேசன், கூட்டுறவு வங்கித் தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் தங்க பாண்டியன், சசிகுமார், சங்க செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ராமச்சந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலி இ-பாஸ்: தஞ்சை வாலிபர்  கைது
தேனி, ஜூன் 28- தஞ்சாவூரிலிருந்து போலி இ-பாஸை பயன்படுத்தி தேனி மாவட்டத்திற்கு காரில் வந்த வாலிபரை தேவதானப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர், ஸ்ரீராம்நகரைச் சேர்ந்தவர் அந்தோனி (26). இவர், தஞ்சாவூரிலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள கம்பத்திற்கு காரில் வந்துள்ளார். தேனி மாவட்ட எல்லை யில் உள்ள தேவதானப்பட்டி சோதனைச் சாவடியில் அந்தோனி வந்த காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். விசாரணை யில் அவர் போலி இ-பாஸை பயன்படுத்தி தேனி மாவட்டத்திற்கு வந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தேவதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அந்தோனியை கைது செய்தனர்.

கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை
விருதுநகர், ஜூன் 28-விருதுநகர் அருகே உள்ள லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (54), ரயில்வே ஊழியர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோய்த் தொற்று இருந்துள்ளதாகப் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை பிரபா கரன் இறந்து விட்டார். இதனால் அவரு டைய மனைவி ரமா பிரபா (48) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். விருதுநகர் மேற்குகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் திருட்டு
நத்தம், ஜூன் 28- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரே நாளில் ஆறு கடைகளின் பூட்டை உடைத்து, பணம், நகை,குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் அடையாளம் தெரி யாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்,  நத்தம் அவுட்டர் அருகே மணி என்பவ ருக்குச் சொந்தமான அரிசி கடை உள்ளது. கொரோனா காரணமாக இரவு 9 மணி  முதல் காலை 5 மணிவரை பொது மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதால், அனைத்து கடை கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதை பயன்பத்திய ஒரு கும்பல், சனிக்கிழமை இரவு அரிசிக் கடை, பேக் கரி, உரக்கடை, தின்பண்டங்கள்கடை, செருப்புக் கடை, மருந்துகடை ஆகியவற் றின் பூட்டை உடைத்து கடைகளில்  இருந்த பணம், நகை,குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று விட்டது. அரிசிக் கடையில் திருடும் போது சிசிடிவி காட்சியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்த மின் இணைப்பைத் துண்டித்து திருட்டில் ஈடு பட்டுள்ளனர். நத்தம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேர் உயிர் தப்பினர்
மதுரை, ஜூன் 28- மதுரை அனுப்பானடி காமராஜர்புரம் வடக்குத்தெருவில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் கட்டட மேற்கூரை மற் றும் தரைத்தளம் இடிந்து விழுந்தது. இதில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்டனர்.

ஒருவர் கைது
திருவில்லிபுத்தூர், ஜூன் 29 திருவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமைஇரவு நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரண்டு மான்கள், காட்டுப்பன்றி ஒன்றையும் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வேட்டையாடிய இராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த காளிராஜ் என்பவரைப் பிடித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினரும், வனத்துறையினரும் விசா ரணை நடத்தி வருகின்றனர். காளிராஜனுடன் வேட்டையாடச் சென்றவர்களை வனத்துறை யினர் தேடி வருகின்றனர். வேட்டையாடப்பட்ட இடத்திற்கு சென்ற மோப்ப நாய் சிமி வேட்டை யாடப் பட்ட இடத்தில் இருந்த இரண்டு மான்களின் தலையை கண்டுபிடித்தது.

;