உளுந்தூர்பேட்டை ஜூலை 18 உளுந்தூர்பேட்டை யில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சில சேவை குறை பாடுகளை சுட்டிக்காட்டி தீக்கதிர் நாளிதழில் சில தினங் களுக்கு முன்பு செய்தி வெளி யானது. இதனடிப்படையில் வங்கியின் நிர்வாகம் உட னடியாக தலையிட்டு சில குறைபாடுகளை போக்கி பொது மக்கள் சேவையை மேம்படுத்தியுள்ளது. உளுந் தூர்பேட்டையில் விருத்தாச லம் சாலையில் அமைந் துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் இயந்திர கோளாறு மற்றும் ஏடிஎம் வாசலை வாடிக்கை யாளர்கள் எளிதில் அணுக முடியாதவாறு இருசக்கர வாகனங்கள் சூழப்பட்டு இருப்பதுகுறித்து சில தினங் களுக்கு முன்பு தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து வங்கி அதி காரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். ஏடிஎம் வாசலுக்கு முன் மரக்கழிகளை நட்டும், வங்கிக்கு முன்பு மரக்கழிகள் மூலமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இத னால் இருசக்கர வாகனங்கள் குறுக்கே நிறுத்தாமல் வாடிக்கையாளர்கள் சிரம மின்றி வங்கிக்குள் செல்ல வழி ஏற்பட்டுள்ளது. இதே போல ஏடிஎம்மில் இருந்து நான்கு ரசீது வருவதும் சரி செய்யப்பட்டு தற்போது ஒரு ரசீது மட்டும் வாடிக்கையா ளர்களுக்கு வழங்கப்படு கிறது. இதேபோல வாடிக்கை யாளர் சேவையும் மேம்ப டுத்தப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். முறையற்ற முறையில் வாகனங்களை நிறுத்தை முறைப்படுத்துமாறு காவல் துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள தாகவும் அதிகாரிகள் கூறி னர்.