விழுப்புரம்.பிப்.17- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட கண்ட மங்கலம், நவமால்மருதூர், சின்னபாபு சமுத்திரம், குயி லாபாளையம் உள்ளிட்ட நான்கு கிராமங்களை சேர்ந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திங்களன்று (பிப். 17) கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நூறு நாள்வேலை வழங்க வேண்டும் என மாவட்டக் குழு உறுப்பினர் சி.காசி நாதன் தலைமையில் தர்ணா வில் ஈடுபட்டனர், இதில் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ் ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார், சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டு வந்த நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, வரும் வியாழக்கிழமை முதல் வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர், இதனை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.