tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலயை ஞாயிறன்று (நவ.10) அதிகாலை  சமுக விரோதிகள் சேதப்படுத்தினர். இதனை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ரவி, வட்டக் குழு உறுப்பினர் பி.அருள், மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஏ.பத்மா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பாபு, நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.