tamilnadu

கொரோனா பாதிப்பு 149 ஆக உயர்வு  

விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண் ணிக்கை 139 ஆக இருந்தது. இந்த நிலை யில், சென்னை, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து விருதுநகர் மாவட் டத்திற்கு வந்த சிலரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டனர்.   சென்னையிலிருந்து எட்டக்காபட்டி வந்த 39 வயது ஆண், சாத்தூர் வெங்கடா சலபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளை ஞர், 35 வயது பெண், திருத்தங்கல்லைச் சேர்ந்த 38 வயது ஆண், மாரனேரியைச் சேர்ந்த 24 வயது இரட்டையர்கள், சாத்தூ ரைச் சேர்ந்த 42 வயது பெண், அருப் புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், விருதுநகர் சுப்பை யாபுரத்தைச் சேர்ந்த பெண், தெலுங்கா னாவிலிருந்து வந்த அருபபுக்கோட்டை மேலக்கண்டமங்களத்தைச் சேர்ந்த 17 வயது ஆண் ஆகிய பத்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறதி செய் யப்பட்டது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.