tamilnadu

வேளாண் இயந்திரம் வழங்கல்

திருவில்லிபுத்தூர், ஜூன் 7-  திருவில்லிபுத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா வேளாண் ஒருங்கிணைந்த விரிவாக்க மையத் தில் நடைபெற்றது. விருதுநகர் வேளாண் இணை இயக்குநர்கள் சங்கர், நாராயணன் ஆகியோர் தலைமை வகித்த னர். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) விஜயா முன்னிலை வகித்தார். திருவில்லி புத்தூர் வட்டாரத்தில் 2019-20 ஆம் ஆண்டு கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மம்சா புரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மானிய விலை யில் வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி துணை வேளாண்அலுவலர் அம்மை யப்பன் ஆகியோர், மம்சாபுரம் பகுதி உதவி வேளாண் அலுவலர் அழகு சுந்தரி ஆகியோர் கலந்துகொண்டனர்.