சென்னை,ஜன.14- இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் முதலமைச்சர் வெளிநாடு சென்றபோது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 15 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் 6,608 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, 6763 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.