tamilnadu

img

2020 பட்ஜெட் மக்கள் கோரிக்கை கலந்துரையாடல்

விழுப்புரம்.ஜன.23- விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சார்பில்,‘2020 -பட்ஜெட் அறிக்கை யில் விழுப்புரத்தின் எதிர்ப்பார்ப்புகள்’ என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார். நாட்டின் பொரு ளாதார நிலை குறித்து பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட மருந்து  வணிகர் சங்கத் தலைவர் என்.ராம கிருஷ்ணன், வணிகர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஜ.ரமேஷ், பொருளாளர்எம்.கலைமணி, போரா, குலோத்துங்கன், அரிசி ஆலை சங்கத் தலைவர் குபேரன் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவித்தனர். விதிமீறிய ஆன்லைன் வர்த்தகம் தமி ழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது என்றும் குறிப்பாக, மருந்து வணி கத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உள்ளிட்ட அனைத்து மருந்து களையும் அரசு அனுமதியின்றி ஆன் லைனில் விற்பனை செய்கின்றனர். தமிழ கத்தில்தான் அதிகளவில் (14 சதவீதம்) ஆன்லைன் விற்பனை நடக்கிறது. இத னால், அரசுக்கும் வரி இழப்பு உள்ளதால், ஆன்லைன் பொருள்கள் விற்பனையை தடை செய்ய மக்களவையில் வலியுறுத்த வேண்டும். வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி  வரி கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் தொழில் வளர்ச்சி பெற  சிப்காட் தொழில் பேட்டை அமைக்க வேண்டும். விழுப்புரம் ரயில் நிலையத்தில்  மதுரை, திருச்சி, சேலம் ரயில் நிலையங்க ளைப் போல மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதை அமைக்க வேண்டும், விழுப்புரத்திலிருந்து திருச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை, கடலூர் வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

;