tamilnadu

img

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, அக். 12- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,  மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்க ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள் ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில  பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்க ளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது  என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.