tamilnadu

img

போராடிப் பெற்ற மாநிலங்களை இரவோடு இரவாக ஒழிக்கும் மோடி அரசு

தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கில் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

திருத்தணியில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்

திருத்தணி, நவ. 1  - போராடிப் பெற்ற மாநிலங்களை இரவோடு இரவாக ஒரே ஒரு உத்தரவை போட்டு ரத்து செய்யும் பாஜகவின் செயலை மக்கள் அனுமதிக்க கூடாது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தினார். தமிழ்நாடு மாநில அமைப்பு தின மான நவ-1 அன்று “அன்னைத் தமிழை அரியணையேற்றுவோம்; தமிழ் மொழி யை  பாதுகாப்போம்’’ என்ற உறுதி மொழி ஏற்கும்  தமிழ் மொழி வளர்ச்சி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை திரு த்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசுகையில், “தமிழ் வளர்ச்சிக்காக வீரம் செறிந்த போராட்டம் நடைபெற்ற திருத்தணியில் இந்த கருத்தரங்கம் நடை பெறுவது சிறப்பம்சம். திருத்தணியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்ட த்தில் மாபொசி,  விநாயகம்,  கோல்டன் சுப்பிரமணி, என்.ஏ.ரஷீத் ஆகியோர் இந்த பகுதியில் தளபதிகளாக இருந்து நடத்தினர். இந்த தளபதிகளில் ஒருவ ரான ரஷீத் என்பவரின் வாரிசு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.அப்சல் அகமது தலைமையில் இந்த கருத்தரங்கம் நடப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு என்ற பெயர் உருவாக்க கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது. தமிழ் மொழி ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழக்காடு மொழியாக நிர்வாக மொழியாக அமைய வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்டு களின் போராட்டத்தை இளைய தலைமுறைகளுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது  என்று கூறிய அவர்,  தேசிய இனப்பிரச்சனை, மொழி பிரச்சனை ஆகியவற்றில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தெளிவான கொள்கையை கொண்டிருந்தது என்றும் குறிப்பிட்டார். 

“1920ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தீர்மானம் போட்டது. ஆனால் சுதந்தி ரத்திற்குப் பிறகு மொழிவழி மாநிலங் களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 1925-ல்  உருவான ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா ஆகிய அமைப்புகள் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கக் கூடாது, அதிக அதிகாரம் கூடாது மற்றும் மொழி களுக்கு முக்கியத்துவம் கூடாது என பிரச்சாரம் செய்து வந்தனர் என்று சுட்டிக்காட்டிய அவர், 

“1961-ல் தோழர் பி.ராமமூர்த்தி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய  சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். முதன்முதலில் கம்யூனிஸ்டுகள் தான் ‘மதராஸ் மாகாணத்தை’  தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். 

இந்த நிலையில் மாநில உரிமை களை தட்டிப் பறிப்பது, மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்குவது என மோடி அரசாங்கம்  எதேச்சதிகாரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி  மாநி லங்கள் இல்லாத ஆட்சியை கொண்டு  வரும் முயற்சி, காஷ்மீரில் துவங்கி  இருக்கிறது. எனவேதான் மாநிலங் களின் உரிமைகளைப் பாதுகாப்ப தற்கான போராட்டமாக இந்த நாளை கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் கொண்டாடுகிறோம் என்றும் கூறினார். கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கி னார். மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தர ராசன்,  மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.செல்வராஜ், ஏ.ஜி.சந்தானம், கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.அந்தோணி, கே. ஜி.கணேசன், சி.பெருமாள் வட்டக் குழு உறுப்பினர்கள் கே.எஸ். சம்மந்தம், வி.பாலாஜி,  ஏ.கரிமுல்லா, ஆர்.பொற்கொடி, சி.ஜெய்சங்கர் உள்பட பலர் பேசினர்.

;