tamilnadu

img

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் வ.உ.சி. சிலைக்கு மரியாதை

கரூர்,நவ.20- அகில இந்திய திருவள்ளுவர் மாணவர், இளைஞர் பேரியக்கத்தின் சார்பில் வஉசியின் நினைவு தினத்தையொட்டி கோவை சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய திருவள்ளுவர் மாணவர், இளைஞர் பேரியக்கத்தின் சார்பில் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தில் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் விழா நடைபெற்றது.  அகில இந்திய திருவள்ளுவர் மாணவர், இளைஞர் பேரியக்கத்தின் அகில இந்திய  ஒருங்கிணைப்பாளர் கரூர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார்அருண்காந்தி வஉசியின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும், வஉசி இழுத்த எண்ணெய் செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முனைவர் ராமசுப்ரமணியன், காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார்அருண்காந்திக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.