tamilnadu

img

மாணவர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 3- கொரோனா வைரஸ் தெ?ற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசியளவில் விமான சேவை, ரயில் சேவை, பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள், உள்ளிட்டோர் பல்வேறு ஊர்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நாட்டின் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் மாண வர்கள் “nonresidenttamil.org” என்ற இணைய முகப்பில் உள்ள ‘Return to  Tamil Nadu’ என்ற இணைய படிவம்  (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாக  பதிவு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

;